10th October 2020 06:12:48 Hours
இன்று காலை (11) அறிக்கையின்படி 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், இரண்டு பேர் செங்கடலில் சேவையாற்றும் கப்பல் ஊளியர்கள் கபரதிவ பொலிஸ் நனிமைப்படுத்தல் மையத்திலும் மற்றும் ஏனைய 101 நபர்கள் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களின் நெருங்கிய தொடர்பாளர்களாகும் மற்றும் ஏனைய 02 பேரும் தொழிற்சாலை ஊளியர்கள் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (11) காலை 6.00 மணி வரையிலானகாலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1186.ஆகும்.
மேலும் தோகாவில் இருந்து QR 668 விமானம் மூலம் 44 நபர்கள் இன்று (11) காலை இலங்கை வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்காக தனிமை படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (11) தனிமைப்படுத்தப்பட்ட 90 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் ருவல கற்பிட்டி தனிமைபடுத்தல் மையத்தில்(02), ஹபரதுவ பொலிஸ் தனிமைபடுத்தல் மையத்தில்(03), எயார மொபைல் பயிற்சி பாடசாலை தனிமைபடுத்தல் மையத்தில்(60),ஹோட்டல் ஜெட் விங் புளூ தனிமைபடுத்தல் மையத்தில்(07),ஹோட்டல் டொல்பின் தனிமைபடுத்தல் மையத்தில்(04),மற்றும் பியகம விலேஜ் தனிமைபடுத்தல் மையத்தில்(14), ஆகிய தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.
11 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 50726 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (11) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 92 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,224 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (10) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 4754 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 325,763 ஆகும்.
11 பூரணமாக குணமடைந்த கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (11)காலை 6.00 மணியளவில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆவர். trace affiliate link | Air Jordan Release Dates 2021 Updated , Gov