Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2020 10:12:13 Hours

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் இராணுவ ஆண்டு நிறைவு தின வாழ்த்து செய்திகள்

முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் டுவிட்டர் செய்தியில் இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு விழா தினத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

71 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவம் நாட்டின் ஒற்றையாட்சி நிலை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வெற்றிகரமான முறையில் பாதுகாக்க தீவிரமாக பங்களித்துள்ளது. தாய்நாட்டிற்கு எதிரான அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், சவால்கள் மற்றும் பேரழிவுகள் இருந்தபோதிலும், அது தொடர்ந்து தேசத்தின் பாதுகாவலராக செயல்படுகிறது. கொவிட்-19 தொற்றுநோய்களில் அவர்களின் முகாமைத்துவம் மறுறும் அவர்களின் வகிபாகங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன், மேலும் தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் தேசிய வளர்ச்சியில் அவர்கள் வகித்த பங்களிப்புகளுக்கு அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் 71 ஆவது இராணுவ ஆண்டுவிழாவில் அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 71 ஆவது இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து கொடுரூரமான மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமல்லாமல், தேசம் எந்தவொரு கடினமான சவாலையும் எதிர்கொள்ளும்போதெல்லாம் அவர்கள் தொடர்ந்து வெவ்வேறு பாத்திரங்களாக தொடர்ந்து செயல்படுவதன் காரணமாக இராணுவத்தின் துணிச்சலான வீரர்களை நினைவுகூருவது கட்டாயமாகும் என குறிப்பிட்டார்.படையினரின் மனிதநேயம் மற்றும் உலகைப் பாதித்த கொவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் அவர்களின் பணி கடினமானது மற்றும் பாராட்டத்தக்கது. ஒற்றையாட்சி அந்தஸ்தாக வளரவும் உயரவும் அவர்கள் நாட்டுக்கு வழங்கிய அர்ப்பணிப்பு மிகவும் மகத்தானது. இலங்கை புத்துயிர் பெறும் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது, தேசத்தின் பாதுகாவலர்களான அந்த படை வீரர்களை முழு தேசமும் நினைவு கூரவேண்டும். spy offers | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys