07th October 2020 05:00:57 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படையினர் (02) ஆம் திகதி வெள்ளிக்கிழமை (2) கொல்லுபிட்டி புனித மைக்கல் கல்லூரியில் கற்கும் வரிய மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கினர்.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன கந்துன்முல்ல அவர்களின் வேண்டுகோளுக்கமைய இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் சேவா வனிதா பிரிவினர் இப் பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த தொண்டு நிகழ்ச்சிக்கு பங்களிப்பு வழங்கினர். 1 ஆவது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ். தெமுனி அவர்களின் வேண்டுகோளிற்கமைய, கொழும்பின் லயன் கிளப்பினர் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கினர்.
அதன்படி, இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி தீபா ஹந்துன்முல்ல அவர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தந்ததுடன், தகுதிபெற்ற மாணவர்களுக்கு பாடசாலை பைகள், எழுதுபொருள் பெட்டிகள் மற்றும் பரிசுப் பொருட்களை விநியோகித்தார். முதியோர் தினத்தை முன்னிட்டு அவர்களின் பெற்றோருக்கு விஷேட உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு இணையாக, இலங்கை கண் சங்கத்தால் ஒரு கண் சிகிச்சை நடத்தப்பட்டது மற்றும் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது குறித்த சில விரிவுரைகளும் குறித்த கூட்டத்தில் வழங்கப்பட்டன.
நடன இசை நிகழ்ச்சி, கொவிட்-19 தொற்று நோயில் இலிருந்து தடுப்பதற்காக பாடசாலைக்கு கிருமி அழிப்பு திரவம் நன்கொடை செய்தல் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சேவா வனிதா பிரிவினால் அனைத்து சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. Sport media | UOMO, SCARPE