Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2020 07:00:57 Hours

கிழக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு திட்டம்

'எக்வ சுரகிமு நெஹினஹிர' (கிழக்கை ஒன்றாகப் பாதுகாப்போம்) மற்றும் 'எக்வ சுரகிமுநெஹினஹிர' (பொலன்னறுவையை ஒன்றாகப் பாதுகாப்போம்) என்ற கருப்பொருள்களின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு திட்டம் ஞாயிற்றுக்கிழமை (04) காலை கிழக்கு கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தில் இரு பிராந்தியங்களிலும் உள்ள பல சமூக சேவை அமைப்புகள் அனைத்து இனத்தவர்களையும் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் பங்குபற்றினர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் தேசிய முக்கியத்துவத்தையும், முழுப் பகுதியிலும் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டமானது, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தகமகே அவர்களால் முன்மொழியப்பட்டது, குறித்த திட்டதினை அதே நாள் திருகோணமலை முதல் ஹபரனை வரையிலான பெரிய விழிப்புணர்வு கொண்ட சமூகம் சார்ந்த இராணுவத் திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

குறித்த திட்டத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் 29 ஆம் திகதி பாடசாலைகள் முழுவதும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது, மேலும் இந்த திட்டம் தோல்வியடையாமல் வெற்றிகரமாக மாறும் வரை தொடரும். வெள்ளிக்கிழமை 2 ஆம் திகதி பஸ் பயணிகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் மத்தியில் அச்சிடப்பட்ட பல்வேறு பிரச்சாரங்கள் உள்ளடங்கிய ஸ்டிக்கரகைளை விநியோகிக்கப்பட்டன,மேலும் குறித்த திட்டமானது பிராந்தியத்தின் முக்கிய நகரங்களின் வீதியோரங்களில் குப்பைகளை குவிப்பதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தது.

முக்கிய மதங்களின் மத பிரமுகர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி, 22, 23 மற்றும் 24 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதி ,சிரேஷ்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் , சிவில் அமைப்புகளின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெவ்வேறு நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆரம்ப நிகழ்வில் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

கிழக்கின் வெவ்வேறு இடங்களில் இந்த திட்டம் இன்னும் இடம்பெற்று வருகின்றது. Nike Sneakers Store | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival