10th October 2020 01:00:39 Hours
இலங்கை இராணுவம் தனது இராணுவ தினத்தை முன்னிட்டு (அக்டோபர் 10) மற்றும் 71 ஆவது ஆண்டுவிழாவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான திசர பெரேரா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இன்று 9 ஆம் திகதி இராணுவ தளபதியவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேஜர் தரத்திற்கு தரமுயர்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையில் இணைந்து கொண்ட இருவருக்கும் தர சின்னத்தினை அணிவித்து அவர்கள் இருவரையும் வாழ்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக கஜபா படையணியில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களிடையே கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மேஜர் திசர பெரேரா அவர்கள் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் மரியாதைக்குரிய வீரர்களாக திகழ்ந்த கஜபா படையணியில் இணைக்கப்பட்டார். தற்போது, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கஜபா படையணி மற்றும் விசேட படையணியின் படைத் தளபதியாவார்.
முதல் பகல்-இரவு டெஸ்ட் ஆட்ட போட்டியில் இலங்கையை வழிநடத்திய முதல் கெப்டனான மேஜர் தினேஷ் சந்திமல் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
திசர பெரேரா ஒரு தொழில்முறை இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கெப்டன் ஆவார், அவர் தற்போது இலங்கை டெஸ்ட் ஆட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முதன்மையாக ஒரு சகல பந்துவீச்சு மற்று இடது கை துடுப்பாட்ட வீரர், அவர் ஓவர்களில் பெரிய சிக்ஸர்களை அடிக்க கூடியவர் மற்றும் ஒரு பயனுள்ள வலது கை நடுத்தர வேக வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர். 2019 ஏப்ரல் இல், அவர் 2019 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பெரேராவை இலங்கை போட்டியின் முக்கிய வீரராக தேர்வு செய்தது.
2019 செப்டம்பர் 26 அன்று தினேஷ் சந்திமால், இலங்கை இராணுவத்தில் தொண்டர் படையில் ஆணையிடப்பட்ட அதிகாரியாக சேர்ந்தார் மற்றும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 2020 ஓகஸ்ட் இல், இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடும்போது, சந்திமால் இலங்கையில் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 354 ஓட்டங்களை எடுத்தார். சில நேரங்களில் விக்கெட் காப்பாளராக மற்றும் நடுத்தர பெட்ஸ்மேனாக விளையாடும் ஒரு சுறுசுறுப்பான வலது கை பெட்ஸ்மேன் ஆவார், சந்திமால் அவர்களின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கையை வழிநடத்திய முதல் கெப்டன் ஆவார்.
சந்திமால் 2011 டிசம்பரில் இலங்கைக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்டில் விளையாடினார் இலங்கையின் ஒவ்வொரு இன்னிங்சிலும் அரைசதம் (58 மற்றும் 54) பெற்று இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்த முதல் இலங்கை பெட்ஸ்மேன் ஆனார். இது தற்செயலாக இலங்கையை தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் வெற்றிக்கு இட்டுச் சென்றது.
இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய மற்றும் போர்க் கருவி ஜெனரல் மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க, இராணுவ கிரிக்கெட் பிரதித் தலைவரும் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். affiliate link trace | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat