Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2020 07:25:57 Hours

62 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான உணவக அறையானது திறந்து வைப்பு

வெலியோயாவில் உள்ள 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் சமந்த சில்வா அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம், அப்படைத் தலைமையகத்தின் இராணுவச் சிப்பாய்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான உணவக அறையானது வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களால் மகா சங்கத்தின் 'செத் பிரித்’ மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் 3 ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.பின்னர் பால் பானை ‘கிரி இதிரவீமா’ கொதிக்கும் சடங்கில் இணைந்து கொண்டார். எபின்னர் பிரதம அதிதியவர்கள் அனைத்து படை வீர்ர்களுடன் தேநீர் வருந்துபசாரத்தில் கலந்து கொண்டதோடு, படைத் தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்றினையும் நட்டார்.

குறித்த நிகழ்வில் 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி , 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். bridge media | AIR MAX PLUS