08th October 2020 09:01:11 Hours
முதலாவது விஜயபாகு காலாட் படையின் 32 வது ஆண்டு நிறைவு மற்றும் 71 வது இராணுவ தினத்தை கொண்டாடுவதற்கு இணையாக ஒரு சுத்தம் செய்யும் திட்டத்தையும் இரத்த தான நிகழ்வையும் ஏற்பாடு செய்தது. சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமை (4) குருநாகலை போயகனே மகா வித்யாலயத்தில் நடைபெற்றது. இரத்த தானம் திங்கட்கிழமை (5) முகாம் வளாகத்தில் அனைத்து படையினர் மற்றும் சிவில் பணியாளர்களின் பங்குபற்றலில் நடைப்பெற்றது.
மேலும்விஜயபாகு கலாட் படை தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வழங்கினர். இதன்போது மொத்தம் 111 நன்கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்விற்குகுருணாகலை போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. Nike footwear | Nike Shoes