Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2020 10:19:03 Hours

மேலும் 29 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் - கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (09) செவ்வாய்க்கிழமை அறிக்கையின்படி 29பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 19 நபர்கள் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள்.(18 பேர்மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் மற்றும் ஒரு ஊழியர்)ஏனைய 10 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள்ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்து பியகமவில்லேஜ் தனிமைபடுத்தல் மையத்தில் (05), எதியோபியாவில்இருந்து வருகை தந்து சீகிரி ஹோட்டல்தனிமைபடுத்தல் மையத்தில் (02),ஈரானில் இருந்து இருந்து வருகை தந்து கல்பிட்டிய தனிமைபடுத்தல் மையத்தில் (02) சுடானில் இருந்து வருகை தந்து சீகிரி வில்லேஜ் தனிமைபடுத்தல் மையத்தில் (01) தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (09) காலை 6.00 மணி வரையிலானகாலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1053.ஆகும். மேலும் லன்டனில்இருந்துUL504விமானம் மூலம் 09நபர்கள் இன்று (09) காலை இலங்கை வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்காக தனிமை படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (09) தனிமைப்படுத்தப்பட்ட 136 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களில் ருவல கற்பிட்டி தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், முழங்காவில் தனிமைபடுத்தல் மையத்தில் (52),ஜெட்வின் புளூ வேட்டர் தனிமைபடுத்தல் மையத்தில் 09,ஹோட்டல் மிராஹே தனிமைபடுத்தல் மையத்தில் (06), ராஜகிரிய தனிமைபடுத்தல் மையத்தில் 12பேர், தியகமவிளையாட்டு வளாக தனிமைபடுத்தல் மையம்(18), ஆகிய தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

09 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 49,689 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (09) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 80தனிமைப்படுத்தல் மையங்களில் 9630 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (06) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 2600ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 313,813 .ஆகும்.

நான்கு பூரணமாக குணமடைந்த கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (09)காலை 6.00 மணியளவில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.மேலும் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பூரன குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும். Nike sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf