07th October 2020 07:30:57 Hours
71 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு, 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 522 பிரிகேட் படையினரால் செவ்வாய்க்கிழமை (6) கெட்பிலி கடலோர கடற்கரை தொடக்கம் கிலாலி லகோன் வரையான சிரமதான பணிகளானது மேற்கொள்ளப்பட்டது. குறித்த திட்டமானது 52 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கீத்சிரி லியனகே மற்றும் 522 ஆவத் பிரிகேட் படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் ஜனக விஜேசிரி ஆகியோரின் வழிகாட்டுதலின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஊடாக மாசுபட்ட முக்கிய கடலோரப் பகுதிகளில் உள்ள காகிதங்கள்,பொலிதீன், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று பியர் டின்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறித்த கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இந்த சிரமதானப் பணிகளானது 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 522 ஆவது பிரிகேட் மற்றம் 7 ஆவது (தொண்) மற்றும் 15 ஆவது பட்டாலியன் கஜபா படையணியின் படையினர் பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் முயற்சிகளுக்கு சமூக பங்களிப்பை ஏற்படுத்தும் அதே வேளையில் பொது மக்களிடையே கடலோர மற்றும் கடல் வளங்களின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில், 52 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் த்தளபதி,522 ஆவது பிரிகேட் படைத் தளபதி மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த சிரமதான நிகழ்வில் பங்கேற்றனர். சிரமதான நிகழ்வின்போது அதில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு ஏற்பாடகள் செய்யப்பட்டன. best Running shoes | Autres