07th October 2020 08:00:57 Hours
பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு , அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகமானது, 'ஜனாதிபதி கம சமக பிலிசந்தர' திட்டத்தின் கீழ் பதுளை ஹல்தும்முல்லயிலுள்ள ஹல்தும்முல்ல வித்தியாலத்தில் மேலும் ஒரு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக வெள்ளிக்கிழமை (25) அதனுடைய திறமையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கியது.
மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் குறித்த கட்டிடத்தினை அமைப்பதற்கான தொழில்நுட்ப திறமையான பொறியியல் படையினரை வழங்கினார். குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் அந்த பகுதியில் தங்கியிருந்தபோது, யானை தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்படும் புதிய வீட்டின் கட்டுமான பணிகள் மற்றும் ஹல்தும்முல்ல பகுதியில் கட்டுமானத்தில் உள்ள புதிய விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டார். ஹல்தும்முல்ல நகராட்சி மன்ற தவிசாளர், இராணுவ அதிகாரிகள் மற்றும் குறித்த திட்டங்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் ஆகியோரும் ஆய்வு சுற்றுப்பயணத்தில் சேர்ந்து, தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தனர். latest jordan Sneakers | New Balance 991 Footwear