07th October 2020 06:45:57 Hours
ஞாயிற்றுக்கிழமை (4) ஆம் திகதி புதிய கொரோனா தொற்று நோயாளர் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, (06) செவ்வாய்க்கிழமை இன்று காலை அறிக்கையின்படி 739 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 729 நபர்கள் கம்பஹா-மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் உள்ளவர்கள் மற்று அவர்களுடன் தொடர்ப்புகளை பேணியவர்கள் மற்றும் மற்றும் ஏனைய 10 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களாவர் . அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (4) ஆம் திகதிக்குப் பின்னர் ,(07) ஆம் திகதிய நிலவரப்படி கொவிட் -19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது உள்ளது. அவர்களில் ஜப்பானில் இருந்து வருகை தந்து (01) காலி டெம்ப்ல் டிரீ தனிமைபடுத்தல் மையத்தில் (01) இந்தியா மாலுமி கொழும்பு சினமன் காடன் தனிமைபடுத்தல் மையத்தில்(01),ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த (05) நபர்கள், கதிர்காமம் மந்தார தனிமை படுத்தல் மையம்,திக்வெல்ல ரிசார்ட் தனிமை படுத்தல் மையம்,, ஹம்பாந்தோட்ட சூரிய ரிசார்ட், (01),மாலைத்தீவில் இருந்து வருகை தந்து காலி டெம்ப்ல் டிரி தனிமை படுத்தல் மையத்தில் (01), ஜப்பானில் இருந்து வருகை தந்து இராணுவ பொது சேவை படையணியின் தனிமைபடுத்தல் மையத்தில் (01) தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (07) காலை 6.00 மணியளவின் அறிக்கையின்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 832ஆகும். மேலும் தென் கொரியாவிலிருந்துEK 9473 விமானம் மூலம் 285 நபர்கள் இன்று (07) காலை இலங்கை வந்துள்ளனர். , மேலும் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்காக தனிமை படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (07) தனிமைப்படுத்தப்பட்ட 46நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் 03நபர்கள் ஜெட்விங் பீச் தனிமை படுத்தல் மையத்திலும், ஜெட்விங் லகோன் தனிமை படுத்தல் மையத்தில் (06) ஹோட்டல் புளூ வேட்டர்தனிமை படுத்தல் மையத்தில் 09,ஹோட்டல் மிராஹே தனிமை படுத்தல் மையத்தில் (06),ராஜகிரிய தனிமை படுத்தல் மையத்தில் 12பேர், தியகமவிளையாட்டு வளாக தனிமை படுத்தல் மையம்(18),ஆகிய தனிமை படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
07ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 49,416நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (07) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 77 தனிமைப்படுத்தல் மையங்களில் 7356நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (06) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 950 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 298,501.ஆகும்.
பூரணமாக குணமடைந்த 07கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (07)காலை 6.00 மணியளவில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஆவர்.மேலும் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பூரன குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும். short url link | Nike Shoes