Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2020 15:00:12 Hours

643 ஆவது பிரிகேட் படையினர் முத்துஐயன்கட்டுகுளம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைப் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப்பிரிவின் 643 பிருகேட்டின் 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினரால் முல்லைத்தீவு முத்துஐயன்கட்டுகுளம் இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு (02) வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

வறுமையில் வாடும் இப்பிரதேச மக்களின் தேவையினை கருத்தில் கொண்டு 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி.எம்.எஸ். திசாநாயக்க மற்றும் படையினரின் பங்களிப்புடன் தங்களது சொந்த பணத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

64 வதுப் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அஜித் பல்லவல மற்றும் 643 பிரிகேட் தளபதி கர்னல் டிரான் சில்வா ஆகியோர் திட்டத்திற்கு தேவையான ஆலோசணை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். Sportswear free shipping | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite