06th October 2020 14:46:08 Hours
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் 55வது படைப்பிரிவின் 552 பிரிகேட்டின் 23வது கெமுனு ஹேவா படையின் படையினரால் முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அவசியமான கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (2) உலக சிறுவர் தினத்தையொட்டி வழங்கப்பட்டது.
இது நல்லெண்ணம் மற்றும் சகவாழ்விற்கான சமூகத் திட்டமாக படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
55வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சிசிர பிலப்பிட்டி மற்றும் 552 பிரிகேட் தளபதி கர்னல் பிரபாத் முனிபுர ஆகியோர் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய 23வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சாமிந்த திசாநாயக்க முகமாலை பகுதியில் இத் திட்டத்தைத் தொடங்கினார்.
இந் நிகழ்ச்சியின் போது 552 வது பிரிகேட் தளபதி, 23வது கெமுனு ஹேவா கட்டளை அதிகாரி, அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். latest jordans | M2k Tekno