04th October 2020 18:30:12 Hours
இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை மென் மேலும் ஊக்குவிக்கும் நிமித்தம்,மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய பண்டாரவலை, ஹபுத்தலை மற்றும் தியதலாவை உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள உதைபந்தாட்ட வீரர்களுக்கு பண்டாரவலை உதைபந்தாட்ட கழகத்தினரின் ஒத்துழைப்புடன் புதிய டெக்போல் விளையாட்டு (03) சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்போது, பண்டாரவலை தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திறமையான வீரர்களுக்கு டெக்போல் விளையாட்டின் சுருக்கமான பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்வின் முடிவில், மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் பண்டாரவல உதைபந்தாட்ட கழக உறுப்பினர்களுடன் இணைந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
பண்டாரவலை வணிக சமூகத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
டெக்போல் என்பது கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸின் கூறுகளை இணைக்கும் ஒரு பந்து விளையாட்டாகும், இது வளைந்த மேசையில் விளையாடப்படுகிறது. வீரர்கள் உபகரணங்கள் மற்றும் கைகளைத் தவிர உடலின் எந்தப் பகுதியையும் பயன்படுத்தி ஒரு கால்பந்து பந்தைத் தாக்க முடியும், டெக்போல் ஒரு ஒற்றையர் விளையாட்டாக இரண்டு வீரர்களுக்கிடையில் அல்லது நான்கு வீரர்களுக்கு இடையில் இரட்டையர் விளையாட்டாக விளையாடலாம். குறித்த விளையாட்டு நிகழ்வு 2021 ஆசிய கடற்கரை விளையாட்டு மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை விளையாட்டுக்கான திட்டங்களில் சேர்க்கப்பட்ட பின்னர், இந்த விளையாட்டினை இப்போது ஒலிம்பிக் விளையாட்டில் சேர்ப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும். short url link | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE