04th October 2020 16:30:12 Hours
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் கலத்தெவயில் உள்ள இலங்கை படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி மையத்திற்கு கடந்த (29) ஆம் திகதி செவ்வாய்கிழமை உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படையணிக்கு வருகை தந்த படைத் தளபதிக்கு படையினரால் நுழைவாயிற் மரியாதை வழங்கப்பட்டதோடு, அவர் இலங்கை படைக்கலச் சிறப்பணி பயிற்சி மையத்தின் படைத் தளபதி ருவான் விஜேசூரிய அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், இலங்கை படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி மையத்தின் தொகுதிகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக அவருக்கு படையணியின் படைத் தளபதி அவர்கள் விளக்கமளித்தார்.
படைக்கலச் சிறப்பணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் தாரக ரத்னசேகர, பதவி நிலை அதிகாரிகள், மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். latest Nike release | UOMO, SCARPE