Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2020 17:30:12 Hours

65 ஆவது படைப் பிரிவின் படையினருக்கு இடர் முகாமைத்துவம் ” தொடர்பான விரிவுரை

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் அறிவுறுத்தல், மற்றும் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டிக்கிரி திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில், செவ்வாய்க்கிழமை (29) 652 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் இடர் முகாமைத்துவம் மற்றும் அதன் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது இடம்பெற்றது.

கிளிநொச்சி இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் திரு எஸ்.கோகுலராஜ், கிளிநொச்சி இடர் முகாமைத்துவ பிரிவின் உதவி உத்தியோகத்தர் திரு. அகில ஜயசிங்க மற்றும் மாவட்ட நீர்ப்பாசன பொறியாளர் திரு. டி. திசியந்தன் ஆகியோர் குறித்த விரிவுரையினை நடாத்தினர்.

பேரழிவுகளின் தன்மை, பேரழிவுகளின் மேலாண்மை மற்றும் அதன் தணிப்பு, கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் அவசர காலங்களில் பிற அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி அறிய இந்த பட்டறை அனைவருக்கும் உதவியது.

652 ஆவது பிரிகேட் படையின் தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள ஏராளமான அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாயினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth