06th October 2020 09:30:52 Hours
இலங்கை பீரங்கி படைப்பிரிவின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் , அனுராதபுர தலவவில் அமைந்துள்ள 9 ஆவது பீரங்கி படைப்பிரிவிற்கு செப்டம்பர் 30 அன்று தனது விஜயத்தை மேற்கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ‘பீரங்கித் துப்பாக்கி களத்தை திறந்து வைத்தார்.
குறித்த பீரங்கி துப்பாக்கிகளில் அனேகமானவை மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்டவையாகும். அதே சந்தர்ப்பத்தில், அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் புதிதாக கட்டப்பட்ட மற்றும் நன்கு பொருத்தப்பட்ட வொரண்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வரலாற்று மதிப்புமிக்க குறித்த பீரங்கி துப்பாக்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை பீரங்கி படையினரால் மேற்கொண்ட முயற்சிகளை பிரதம அதிதியவர்கள் பாராட்டினார், மேலும் இரு கட்டுமானங்களுக்கும் பங்களித்த அனைவருடனும் கலந்துரையாடினார் . இந்த நிகழ்வில் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர். trace affiliate link | adidas poccnr jumper dress pants size