06th October 2020 11:12:52 Hours
இன்று காலை 06 ஆம் திகதி அறிக்கையின்படி 111 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 111 மினுவாங்கொடையைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் 10 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். அவர்களில் துபாயில் இருந்து வருகை தந்து முலங்காவில் தனிமைபடுத்தல் மையத்தில் (03), மற்றும் 6 பேர் கடற் வழியாக முலங்காவில், சூர்யா ரீசோட், பியகம வில்லேஜ் தனிமைபடுத்தல் மையம் மற்றும், பெரிய ஹாட்டலிலும், கட்டாரில் இருந்து வருகை தந்து பெல்வேஹர தனிமை படுத்தல் மையத்தில் (03), கடற் வழியாக வருகை தந்து ரெட் சீ கபரதுடுவ தனிமைப்படுத்தல் மையத்தில் (01), உள்ளடங்குவர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (6) காலை 6.00 மணியளவின் அறிக்கையின்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆகும். அவர்களில் 69 பேர் ஊழியர்கள் மற்றும் ஏனைய 32 பேர் விடுமுறையில் உள்ள ஊழியர்கள் ஆவர்.
இன்று (05) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.
அபுதாபியில் இருந்து EY 264 விமான மூலம் 11 தோகா பயணிகள், தோகாவில் இருந்து QR668 மற்றும் UL 218 விமான மூலம் 52 பயணிகள், இஸ்தான்புல் துருக்கியில் இருந்து EK 4930 விமானம் மூலம் 260 பயணிகள், கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.
இன்றைய தினம் (06) தனிமைப்படுத்தப்பட்ட 294 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் 02 நபர்கள் ஜெட்விங் சி தனிமை படுத்தல் மையத்திலும், ஜெட்விங் பீச் தனிமை படுத்தல் மையத்தில் (04) ஜெட்விங் லகோன் தனிமை படுத்தல் மையத்தில் 15 பேர், ராணி பீச் ஹோட்டல் 22 பேர், ஹோட்டல் டொல்பின் தனிமை படுத்தல் மையத்தில் 19 பேர், ருவன்வெலி ஹோட்டல் 74 பேர், ராஜகிரிய தனிமை படுத்தல் மையத்தில் 14 பேர், தம்மின்ன தனிமை படுத்தல் மையத்தில் 123 பேர், தியதலாவ தனிமை படுத்தல் மையம் மற்றும் பல்லேகெல தனிமை படுத்தல் மையத்தில் 20 பேர் ஆகிய தனிமை படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
06 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 49,003 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (06) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் 7211 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (05) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 700 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 296,611.ஆகும்.
பூரணமாக குணமடைந்த 02 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (06) காலை 6.00 மணியளவில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்களாகும். கந்தகாடு மற்றும் சேனபுர போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 650 ஆக உள்ளது. (நிறைவு) spy offers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ