04th October 2020 18:15:12 Hours
உலக சிறுவர் தினம் / உலக முதியோர் தினத்தை முன்னிட்டு 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் 562 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் கீழ் இயங்கும் 15 (தொண்) ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் விலத்தகுளம் மற்றும் சின்னவலயங்கடு பிரதேசத்தில் சமூக திட்டங்கள் 01 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் ஊடாக முதலில்,அவர்கள் பாழடைந்த நிலையிலுள்ள குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தை குறித்த பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் பங்குபற்றுதலுடன் புனரமைத்தனர், மற்றும் சின்னவலயங்கடுவில் கவனிக்கப்பரற்ற நிலையில் காணப்பட்ட சிறுவர் பூங்காவினையும் புனரமைதனர்.
அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்ட படையினர், உலக சிறுவர் / முதியோர் தினத்தையொட்டி புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவிற்கு அவர்களை அழைத்து 50 பரிசுப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் 562 ஆவது பிரிகேட் படையின் தளபதி கேணல் சேனக பிரேமவன்ச, 15 (தொண்) ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.எம்பி அத்தநாயக்க ,அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். Asics shoes | Nike Dunk - Collection - Sb-roscoff