Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2020 18:00:12 Hours

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தன்று வன்னி பாதுகாப்புப் படையினரால் அன்பளிப்பு

உலக சிறுவர் தினத்தை நினைவுகூரும் வகையில், வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களுக்கு பெரியளவிலான பரிசுப் பொதிகள் வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதற்கான அனுசரனையானது கலுத்துரையைச் சேர்ந்த நன்கொடையாளரினால் வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை 1 ஆம் திகதி வெலிஓயாவில் உள்ள பரணகம வெவ பாடசாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 150 பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான 60 உலர் உணவுப் பொதிகள் படையினரால் விநியோகிக்கப்பட்டன.இதற்கான அனுசரனையானது கலுதாரா பிரின்ஸ் குழும நிறுவனங்களினால் திரு. லோகனா விக்ரமராச்சி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.வன்னி பாதுகாப்பு படைத்தலையைகம் மற்றும் அதன் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள் பிரிகேடியர் ஜகத் நிஷாந்த மூலமான குறித்த நிகழ்வின் ஒருங்கிணைப்புக்கு ஆசிரியர் இரேஷா அஞ்சானி மற்றும் வர்தகர் திரு. சமிந்த தினேஷ் ஆகியோர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.

குறித்த நிகழ்வானது பாரம்பரிய நடன அம்சங்கள் மற்றும் கலாச்சாரக் காட்சிகளைக் கொண்ட நினைவு விழாவாக காணப்பட்டது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மாணவர்களுக்கான ஓவியங்கள் வரைதல், வாசிப்பு மற்றும் எழுதும் போட்டிகளை ஏற்பாடு செய்யது. அந்த போட்டிகளில் பங்கேற்றதற்காக அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும்,குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட 300 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வழங்கப்பட்டன. இறுதியாக ஒரு இன்னிசை நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்வின் இறுதியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சமந்த சில்வா அவர்கள் அன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

621 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் கீர்த்தி பெரகும், 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் உள்ள சிவில் விவகார அதிகாரிகள், 14 ஆவது (தொண்ட) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள், பரணகம வெவ பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். jordan Sneakers | Nike Off-White