Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2020 11:45:07 Hours

உள்நாட்டில் இரண்டு நபர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஐந்து பேர் கொவிட் தொற்றுக்குள்ளகியுள்ளனர் - கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை 05 ஆம் திகதி அறிக்கையின்படி 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மினுவாங்கொடையைச் சேர்ந்த (02) நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் 05 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். அவர்களில் துபாயில் இருந்து வருகை தந்து முலங்காவில் தனிமைபடுத்தல் மையத்தில் (02), ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்து ஹோட்டல் ஒசோவில் (01), உக்ரைனிலிருந்து கடற் வழியாக வருகை தந்து பீர்ஜய ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் (01), சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்து ஹோட்டல் ஜெட்வின் (01), உள்ளடங்குவர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (05) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.

தோகா கட்டாரில் இருந்து QR668 விமான மூலம் 142 பயணிகள், இந்தியாவில் இருந்து 6E 9035 விமானம் மூலம் 27 பயணிகள், நரிட்ட ஜப்பான் நாட்டிலிருந்து UL455 விமான மூலம் 280 பயணிகள் கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இன்றைய தினம் (05) தனிமைப்படுத்தப்பட்ட 35 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் 16 நபர்கள் ராஜகிரிய தனிமை படுத்தல் மையத்திலும், பியகம லகூன் தனிமை படுத்தல் மையத்தில் ஒருவரும், 18 பேர் நீர் கொழும்பு கெம்லெட் பீச் தனிமை படுத்தல் மையம் ஆகிய தனிமை படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

05 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 48,583 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (05) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 72 தனிமைப்படுத்தல் மையங்களில் 6894 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (01) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1490 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 295,463..ஆகும்.

பூரணமாக குணமடைந்த 4 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (05) காலை 6.00 மணியளவில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்களாகும். கந்தகாடு மற்றும் சேனபுர போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில் தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். (நிறைவு) Best Sneakers | Nike Air Max