04th October 2020 16:00:12 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வவுனியா மற்றும் மன்னார் பிரதேசத்தில் உள்ள 4 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 24 ஆவது இலேசாயுத காலாட் படையணிக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படையணிக்கு வருகை தந்த படைத் தளபதிக்கு படையினரால் நுலைவாயிற் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 24 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எச்.ஆர்.ஏ.கே.பஸ்நாயக்க அவர்களால் வரவேற்கப்பட்டார். .பின்னர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, 24 இலேசாயுத காலாட் படையணியில் புதிதாக அமைக்கப்பட்ட அதிகாரிகளின் உணவகம், ஆனைசீட்டு அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர், 4 ஆவது இலேசாயுத காலாட் படையணியனிக்கு விஜயத்தை மேற்கொண்டார். இப் படை முகாமிற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களை படையினரால் கௌரவிக்கப்பட்டார் பின்னர் அவர் படையினர்க்கு உரையாற்றியதுடன் அவர்களின் நிர்வாகத் தேவைகள் தொடர்பாக விவாதித்தார்.
இதனிடையில் செப்டெம்பர் 28ம் திகதி அவர் 5 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணி மற்றும் 6 ஆவது இலேசாயுத காலாட் படையணிகளையும் பார்வையிட்டார், இப் படையணிகளுக்கு வருகை தந்த படைத் தளபதியை 5 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ரத்னசிறி, மற்றும் 6 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எம்.ஏ.பி. பெரேரா அவர்களால் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயத்தின்போது படையினர்களுக்கு உரையாற்றியதுடன் அவர்களின் சேவை, தொழிலின் தரத்தை உயர்த்த தேவையான வழிமுறைகளை எடுத்துரைத்தார். Sportswear free shipping | NIKE RUNNING SALE