Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2020 13:00:12 Hours

இராணுவ தளபதி தேசிய விளையாட்டு தேர்வுக் குழு தலைவராக நியமனம்

கொழும்பு 7 டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள விளையாட்டு அமைச்சகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (02) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ நமல் ராஜபக்ஷ (பா.உ) அவர்களால் தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவிற்கு நியமனக் கடிதம் வழங்கலும் அமைச்சிற்கு விளையாட்டு கொள்கை விடயத்திற்கான மேன்முறையீட்டு ஆலோசனைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருந்த பாதுகாப்புப் படைத் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அக்குழுவின் தலைவராக நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

திரு சுரேஷ் சுப்பிரமணியம் (தலைவர் - இலங்கை ஒலிம்பிக் கமிட்டி), திரு மேக்ஸ்வெல் டி சில்வா (பொதுச் செயலாளர் - இலங்கை ஒலிம்பிக் கமிட்டி), திரு அர்ஜுன் ரிஷ்யா பெர்னாண்டோ மற்றும் திரு மொஹமட் ஹபீஸ் மார்சோ ஆகியோர் தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் மேன்முறையீட்டு ஆலோசனைக் குழுவிற்கு நீதிபதி கங்கனி தந்தி சித்ராசிரி (தலைவர்), திரு.சந்தக ஜயசுந்தரே பி.சி, திரு. தினால் மரியோ ரெக்ஸ் பிலிப்ஸ் பி.சி, திரு. சித்தத் வெத்தமுனி, திருமதி தமயந்தி தர்ஷா, திரு. அரித்த ராகுல விக்ரமநாயக்க மற்றும் திருமதி. ரோஷனி மேரி கொப்பேகடுவ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு மற்றும் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதனை தொடர்ந்து அமைச்சர் புதிதாக நியமனம் பெற்ற அனைவரையும் வாழ்த்தியதுடன் நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக அந்நியமனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

அதன்பிறகு விளையாட்டுத் துறையின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு தரங்களை மேலும் உயர்த்துவதற்காக விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக அக்குழுக்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால கூட்டு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். அமைச்சரும் இரு குழுக்களின் உறுப்பினர்களும் எதிர்காலத்தில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதிபூண்டனர். jordan Sneakers | Nike for Men