06th October 2020 08:00:11 Hours
'ரணவீரு சேவா அதிகார சபை' ஏற்பாடு செய்த அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்த முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இடைவிலகி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நலன் கருதி இன்று (3) சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்புத் பிரதானி இராணுவத் தளபதி மற்றும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் இந்த ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.
முப்படைகளின் ஊதியம் மற்றும் பதிவு பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், ஓய்வு விவகாரங்கள் பணிப்பகம், புனர்வாழ்வு பணிப்பகம் போன்ற அனைத்து பணிப்பகங்கள் அந்த நடமாடும் சேவையில் பங்கபற்றின.
வீரர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள குடும்பங்களுக்கு அடையாளமாக ‘உத்தமா பூஜை பிரணாமா’ பதக்கங்கள் வழங்கல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெறுநர்களுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் நடைப்பெற்றது. மீதமுள்ளவர்களுக்கு மாவட்டம் மட்டத்தில் வழங்கப்பட உள்ளன. நோயாளிகளின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட்டன.
ரணவீருசேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தசேனாதீர, முப்படையின் படையின் சிரேஸ்ட அதிகாரிகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் ரணவீருசேவா அதிகார சபையின் அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் படையினர் அன்றைய நிகழ்வில் பங்கு கொண்டனர். Best Authentic Sneakers | AIR MAX PLUS