04th October 2020 00:38:36 Hours
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு விழாவினை (அக்டோபர் 10) நினைவுகூரும் வகையில் இராணுவ முஸ்லீம் சங்கம் ஏற்பாடு செய்த இஸ்லாமிய மத பிரார்த்தனை கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் சனிக்கிழமை (3) காலை இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை தலைவர் அல்-ஹஜ் மொஹமட், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் அறங்காவலர் சபையின் உறுப்பினர்கள் இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடியர் அஷ்கர் முத்தலிப் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து அன்புடன் வரவேற்றனர். சில நிமிடங்கள் கழித்து இஸ்லாமிய மரபுகளுக்கு ஏற்ப புனித இடம் அலங்கரிக்கப்பட்டு பிரார்த்தனை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டின் நலன்களுக்காக இராணுவத்தின் சேவைகளைப் பாராட்டி இஸ்லாமிய மத பிரசங்கமான ‘பயான்’ பின்னர் இராணுவக் கொடிக்கு ஆசீர்வாதம் வழங்கல், மௌலவி ஏ.பி.எம். ரிஸ்வான் கிராத் ஓதல் மற்றும் மௌலவி அம்ஹர் ஹக்கீம்தீன் ‘துவா’ பிரார்த்தனை செய்தல் என்பன இடம்பெற்றன.
அதே சந்தர்ப்பத்தில், கொள்ளுப்பிட்டிய ஜும்மா பள்ளி வாசல் அறங்காவல் சபை உபத் தலைவர் அல்-ஹஜ் முஸ்லீம் சலாஹுதீன் அறங்காவலர் சபை சார்பாக இராணுவத் தளபதிக்கு சிறப்பு பாராட்டு நினைவு பரிசை வழங்கினார். இதேபோல், அறங்காவலர் சபையின் செயலாளர் அல்-ஹஜ் எம்.ஐ. சவுல் ஹமீத் புனித அல் குர்ஆனின் நகலை இராணுவத் தளபதிக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக வழங்கினார்.
சிறப்பு இஸ்லாமிய மத பிரார்த்தனைகளின் பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நினைவு சின்னம் மற்றும் புனித வளாகத்தின் வளர்ச்சிக்கு நிதி நன்கொடை வழங்கினார். மேலும் நாட்டில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்து மௌலவியுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இராணுவ முஸ்லீம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பதவி நிலைப் பிரதானி, , சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் படையினர், இராணுவத்தில் முஸ்லீம் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
71 ஆவது இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமைக்கு முன்னதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அனுராதபுர ஜெய ஸ்ரீ மகா போதிய ஆகிய இடங்களில் கொடி ஆசீர்வாத பூஜைகள் நடந்தன. Buy Kicks | Sneakers