Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2020 17:26:36 Hours

தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய சிரேஸ்ட அதிகாரிகள் ஆரோக்கிய மையங்களில் மாற்று திறனாளி படையினரை பார்வையிட்டனர்.

நிறைவாண்டு தினத்தினையொட்டி அனுராதபுர அபிமன்சல–1 க்கு இராணுவத் தளபதியின் விஜயத்திற்கு இணையாக பணிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் குழு ராகம ரணவீரு செவன, அத்திட்டிய மிஹிந்து செத் மெதுர , கம்பிறுபிட்டிய அபிமன்சல-2 , பங்கொல்ல அபிமன்சல-3 ஆகிய இராணுவ புனர்வாழ்வு மற்றும் நல்வாழ்வு மையங்களில் சிகிச்சைப் பெறும் மாற்றுத் திறனாளி படையிரின் நலன் விசாரிக்க விஜயம் மேற்கொண்டனர்.

புதன்கிழமை 30ம் திகதி 71 ஆவது இராணுவ தினத்திற்கு இணையாக பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அபிமன்சல-1 நல்வாழ்வு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே தலைமையில் 14வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல, நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.பி. ஜயசிங்க, நலன்புரி பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.கே ராஜபக்க்ஷ மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் இன்று (30) காலை ராகம ரனவீரு செவன மையத்திற்கு விஜயம் செய்து பரிசில்களை வழங்கினர்.

அத்தோடு வழங்கல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க, பிரதம சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் ஆதீப திலகரதன், கலாற்படை பணிப்பாளர் பிரிகேடியர் ஸ்ரீநாத் ஆரியசிங்க மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் மிஹிந்து செத் மெதுராவில் உள்ளவர்களை பார்வையிட்டனர்.

இதனையடுத்து 61வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க தலைமையில் 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி கொட்டவத்த மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் கம்புருபிட்டி அபிமன்சல-2 இல் சிகிச்சைப் பெறும் படையினருடன் உரையாடினர்.

இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹெரத் தலைமையில் 11வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோன் மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் பங்கொல்ல அபிமன்சல-3க்கு விஜயம் மேற்கொண்டு சிகிச்சைப் பெறும் படையினருக்கு பரிசில்கள் வழங்கினர்.

இந்த விஜயங்களின் போது பிரதிநிதிகள் அவர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் பிற தேவைகள் குறித்து பரிசுப் பொதி வழங்கப்படுவதற்கு முன்பு விசாரித்தனர். பின்னர் அனைவரும் மதிய உணவிற்கு ஒன்றாக அமர்ந்தனர். Sport media | GOLF NIKE SHOES