01st October 2020 07:03:43 Hours
யாழ் பாதுகாப்பு படையின் முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்ஷன ஹெட்டியராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் திரு திருமதி மோகன் ஷங்கர் அவர்களின் நிதியுதவியுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிளிநொச்சி மலையாளபுரம் மற்றும் ஆணைவிழுந்தங்குளம் ஆகிய இடங்களில் வரிய குடும்பங்களுக்காக நிர்மானிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளை (27) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது நல்லிணக்கத்தின் திட்டங்களை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் சமூக நலத் திட்டமாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 9 மற்றும் 20 (தொண்டர்) விஜயபகு காலாட் படையணியின் படையினர்களால் நிர்மானிக்கப்பட்டது.. அவர்களின் கட்டுமான பணிக்கு மேலதிகமாக இரு குடும்பங்களுக்கும் தளபாடங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளையும் வழங்க முன் வந்தனர். திருமதி செங்கண்ணன் ராஜேஷ்வேரி, இலக்கம் 49 மலையாளபுரம், கிளிநொச்சி மற்றும் அக்கராயங்குளம் ஆணைவிழுந்தங்குளம் திரு. திருச்செல்வம் சுவேந்திரம் ஆகிய இரு வரிய குடும்பகளுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வானது இந்து சம்பிரதாய முறைப்பாடுகளுக்கு ஏற்ப இடம் பெற்றதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், 57 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா , 65 படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் டிக்கிரி திசானாயக்க, 572 பிரிகேட் தளபதி 652 பிரிகேட் தளபதி 573 பிரிகேட் தளபதி , 9 மற்றும் 20 (தொண்டர்) விஜயபாகு காலாட்படை படைகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இந்த திட்டத்தை நிறைவேற்றிய படையினரும் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினர். buy footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ