Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2020 14:01:20 Hours

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மேலும் சிலர் வெளியேற்றம்

இன்று காலை (30) ஆம் திகதி அறிக்கையின்படி வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் லெபனானில் இருந்து வருகை தந்து புனானி தனிமைபடுத்தல் மையத்தில் (01), ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்து பிரேன்டிக்ஸ் புனானி தனிமைபடுத்தல் மையத்தில் (01), ஒமான் இருந்து வருகை தந்து சீகிரி அனா தனிமைபடுத்தல் மையம், ஹேகித்த தனிமைபடுத்தல் மையம் மற்றும் பல்லேகெலே தனிமைபடுத்தல் மையத்தில் (07), கட்டாரில் இருந்து வருகை தந்து விடத்தலபை ஒருவரும் ஜேர்மனியில் இருந்து வருகை தந்து பெரிய காடு தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.

துபாயில் இருந்து EK 648 விமான மூலம் 47 பயணிகள், தோகா கட்டாரில் இருந்து QR 688 விமானம் மூலம் 03 பயணிகள், அவுஸ்ரேலியாவில் இருந்து UL 605 விமான மூலம் 287 பயணிகள் மற்றும் இந்தியாவில் UL1042 விமான மூலம் 05 பயணிகளும் இன்று கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இன்றைய தினம் (30) தனிமைப்படுத்தப்பட்ட 343 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் பம்பேமடு தனிமைப்படுத்தல் மையம் (154), ரந்தம்பே தனிமைப்படுத்தல் மையம் (150), பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் (03), ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையம் (23), ஜெட்விங் புளூ (02) எக்கோ சபாரி திஸ்ஸமாராம தனிமைப்படுத்தல் மையம் (01), பல்லேகெல தனிமைப்படுத்தல் மையம் (01), ஜெட்வின் பீச் தனிமைப்படுத்தல் மையம் (01), அமகி ஆர்யா தனிமைப்படுத்தல் மையம் (06), ருவல, கற்பிட்டிய தனிமைபடுத்தல் மையம் (02) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

இன்றுவரை 30 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 46,673 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். இன்று (30 ) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 74 தனிமைப்படுத்தல் மையங்களில் 7132 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (29) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1600 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 285,457 ஆகும்.

இதற்கிடையில், குணமடைந்த 20 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (30) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறயுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களாகும்.

இன்று (30) காலை 6.00 மணியளவில் கந்தகாடு மற்றும் சேனாபுர போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில் தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். Adidas shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ