01st October 2020 09:53:43 Hours
இன்று காலை 01 ஆம் திகதி அறிக்கையின்படி வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்து ஒஸோ ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் (01), ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவர் காலி தனிமைப்படுத்தல் மையத்திலும், ஓமனில் இருந்து வருகை தந்து கன்னோருவ தனிமைப்படுத்தல் மையம் மற்றும் குண்டசாலையில் 02 நபர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்து வெலிசர தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (01) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.
அபுதாபியில் இருந்து EY 264 விமான மூலம் 18 பயணிகள், தோகா கட்டாரில் இருந்து QR 688 விமானம் மூலம் 303 பயணிகள் மற்றும் இந்தியாவில் இருந்து 6E 9034 விமான மூலம் 11 பயணிகள் இன்று கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகிப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.
இன்றைய தினம் (01) தனிமைப்படுத்தப்பட்டிருந்த 19 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் ஜெட்விங் பீச் தனிமைப்படுத்தல் மையம் (06), ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையம் (04), விடத்தபலை தனிமைப்படுத்தல் மையம் (09) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
இன்று (01) ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 47,102 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். இன்று (01) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 78 தனிமைப்படுத்தல் மையங்களில் 7052 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (30) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1640 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 287,864. ஆகும்.
இன்று (01) காலை 6.00 மணிவரை கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சேனாபுர சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில், தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். Mysneakers | adidas Yeezy Boost 350