Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2020 09:28:26 Hours

கிழக்கு படையினரால் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்

தற்போது நடைபெற்று வரும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் (19 -25 செப்டம்பர்) மற்றும் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் -2020 (செப்டம்பர் 19) ஆகியவற்றினை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படையானது பொலிதீன், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று பீயர் கேன்கள், வெற்று மது போத்தல்கள் போன்றவைகளினால் மாசுபட்ட முக்கிய கடலோரப் பகுதிகளில் துப்புரவு செய்யும் திட்டங்களை முன்னெடுத்தன.

இந்த கடற்கரை சுத்தமானது கடற்கரை மற்றும் கடல் வளங்களின் மதிப்பை உணர்ந்து கொள்வதற்கான பொது மக்களின் மனோபாவத்தை உருவாக்குவதற்கும் , கடற்கரை சுத்தத்திற்கான சமூக பங்களிப்பை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி, 241 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைப்பிரிவின் கீழ் உள்ள 11 மற்றும் 16 ஆவது பட்டாலியன்கள் மற்றும் 3ஆவது(தொண்) விஜயபாகு காலாட்படை படையின் படையினர் 'கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து செப்டம்பர் 22, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் சின்னமுத்துவரம், தம்பிலுவில் மற்றும் கல்முனை கடலோரப் பகுதிகளில் துப்பரவு பணிகளை முன்னெடுத்தன. குறித்த திட்டத்திற்கு பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை உறுப்பினர்களின் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

அத்தோடு, 23ஆவது இலங்கை சிங்க படைப்பிரிவின் படையினர், இலங்கை தேசிய பாதுகாப்ப்பு படையின் 8 ஆவது பட்டாலியன் படையினர், இலங்கை கடற்படையுடன் சேர்ந்து திருக்கோவில் கடலோரப் பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், 231 ஆவது பிரிகேட் படையணியின் 4 ஆவது கெமுனு ஹேவா மற்றும் 11 (தொண்) இலங்கை சிங்க படையணியின் படையினர் ஆரியம்பதி, கல்லார், பாசிகுடா மற்றும் கிராண் ஆகிய நான்கு கடலோர பகுதிகளை சுத்தம் செய்தனர். இதில் ஆர்வமுள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

இதற்கிடையில், 221, 223 மற்றும் 233 ஆவது பிரிகேட் படைப்பிரிவுகளுக்கு கீழ் இயங்கும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 15 ஆவது பட்டாலியன், 6 ஆவது கஜபா படையணி மற்றும் 2 ஆவது (தொண்) கஜபா படையணியின் படையினர் குறித்த பிரதேசத்தின் மற்றொரு கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். Sports Shoes | Sneakers