29th September 2020 11:50:26 Hours
நாட்டின் செழிப்புக்கு ஆசீர்வாதம் அளிப்பதற்காகவும், வரவிருக்கும் 'புத்தாண்டு' விழாவை முன்னிட்டு கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்ட 'பிரித்' ரயில் பயணம் சனிக்கிழமை (26) ஆம் திகதி நல்லிரவில் காங்கேசந்துரையில் அமுகமான வரவேற்புக்கு மத்தியில் நிறைவடைந்தன. இதில் 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் செய்தனர்.
12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார , 12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் ஹம்மாந்தோட்டையிலுள்ள படையினர் ஆகியோர் (25) ஆம் திகதி பெலியட்ட ரயில் நிலையத்தில் பயணத்தின் தொடக்கத்தில் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இப் பயணமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
பெலியட்ட ரயில் நிலையத்தில் 12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர் ரயில் பயணம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஸ்தூபியினை ரயிலுக்குள் கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்கினர்.
குறித்த பக்தர்கள் காங்கேசந்துரையை வந்தடைந்ததும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் அவர்கள் அனைவருக்கும் காங்கேசந்துரை போக்குவரத்து முகாமில் தங்குமிட ஏற்பாடுகளை செய்த்தோடு, அடுத்த நாள் (27) தால் செவனவில் 160 ஏழை மக்களை அழைத்து பல நன்கொடைகளையும் வழங்கியது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் குழுவில் உள்ள 25 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குளுடன் இணைந்து குறித் உலர் உணவுப் பொதிகள் மற்றும் 25 சிறப்பு பரிசுப் பொதிகளை அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கினார். அதே சந்தர்ப்பத்தில், மொபைல் ‘பிரித்’ கோஷமிடும் ரயில் பயணத்தின் முடிவையொட்டி தகுதியான பாடசாலை மாணவர்களிடையே 100 பொதி கொண்ட எழுதுபொருட்கள் மற்றும் பாகங்கள் வழங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை (27) ஆம் திகதி காங்கேசந்துரையில் உள்ள திஸ்ஸ விஹாரையில் அனைத்து பௌத்த பிக்குகளுக்கும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அன்னதானம் வழங்கப்பட்டது. புஜ்ஜோமுவ ரயில் நிலையத்தின் போசத் அறக்கட்டளை மற்றும் தம்பதெனியவில் உள்ள கௌதுமுன்ன ரஜமகா விகாரையினால் கூட்டாக ஏற்பாடு செய்த இந்த ரயில் பயணம் சனிக்கிழமை (26) பெலியட்டவிலிருந்து புரப்பட்டது.
இந்த குழு வடக்கே செல்லும் வழியில் அதிமேதகு ஜனாதிபதி, முப்படையினர் மற்றும் காவல்துறைக்கு ஆசீர்வாதம் வழங்கினர். bridgemedia | NIKE