Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2020 16:31:20 Hours

கடத்தப்பட்ட மஞ்சள் மற்றும் கேரள கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றல்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 552 படைப் பிரிவில் உள்ள 12 ஆவது விஜயபாகு காலாட்படையணியின் படையினர் (29) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆனையிறவு சாலையில் பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த போது ஐயக்காச்சியில் இருந்து கிளிநொச்சிக்கு 2 கிலோ கேரளா கஞ்சா கொண்டு செல்ல முயன்ற சந்தேச நபரை யாழ்பாணத்தில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கஞ்சா மற்றும் சந்தேக நபரை பல்லய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில், உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கொண்டாச்சி பிரதேசத்தில் கொமாண்டோ படையணி 3 ஆவது குழு, 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது காட்டுக்குள் மறைத்துவைத்திருந்த ரூ .1.73 மில்லியன் பெறுமதியான 434 கிலோ கடத்தப்பட்ட 10 மஞ்சள் பொதிகள், கைப்பற்றப்பட்டன.

பொலிஸாரால் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. trace affiliate link | Air Jordan