29th September 2020 19:20:11 Hours
'தியாஹி அறக்கட்டளை' ஸ்தாபகர், திரு. வாமதேவ தியாகேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்ட அனுசரனையின் கீழ் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகம் இளைஞர்களின் நலனுக்காக கோப்பாயில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு ‘நல்லிணக்க நிலையத்தினை' (29) ஆம் திகதி செவ்வாய்கிழமை திறந்து வைத்தன.
நன்கொடையாளர்களின் அழைப்பின் பேரில் 511 ஆவது படைப் பிரிவின் 15 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் 'ஒன்றாக விழிப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நிர்மானிக்கப்பட்ட புதிய ‘நல்லிணக்க நிலையமானது, அழகியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சுகாதாரம், கல்வி, தையல், தகவல் தொடர்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகாரங்கள், நடனம், மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகள், விவசாயம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, தொழிற்பயிற்சி தொகுதிகள், தச்சு வேலைகளுக்கு பயிற்சி பெறுவதற்காக பொதுவான மையமாக செயல்படும். இப் பிரதேசத்தின் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் நிர்மானிக்கப்பட்ட இங்கு அனைவரும் இலவசமாக பயிற்சி பெற முடியும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
யாழ்ப் பாதுகாப்பு படையினருடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் கடந்த சில ஆண்டுகளில் யாழ் குடாநாட்டில் விசேட தேவையுடைய பொதுமக்களின் நலனுக்காக சிவில்-இராணுவ ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை தொடங்குவதில் 'தியாஹி அறக்கட்டளை' ஸ்தாபகர், திரு வாமதேவ தியாகேந்திரன் முக்கிய பங்கு வகித்து வருகின்றார். கோப்பாயில் உள்ள புதிய ‘நல்லிணக்க நிலையத்தின் கட்டுமானப் பணிக்காக சுமார் ரூ .1.5 மில்லியன் செலவாகும்.
திறப்பு விழாவிற்கு பின்னர், பல குழந்தைகள் வெவ்வேறு பயிற்சி வகுப்புகளில் இணைவதற்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். பதிவுசெய்தவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அடையாள பரிசுகளும் அதே சந்தர்ப்பத்தில் விநியோகிக்கப்பட்டன. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 51 பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க,நன்கொடையாளர் திரு வாமதேவா தியாகேந்திரன் ஆகியோர் கோபாயில் புதிய 'ஹார்மனி மையத்தை' திறந்து வைத்தனர்.
பல முன்னணி பொதுமக்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் குறித்த இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். buy shoes | Nike Running