01st October 2020 20:58:46 Hours
இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டினை முன்னிட்டு தற்போது அனுராதபுரத்தில் மத நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சாலியபுராவில் உள்ள கஜபா படைத் தலைமையக பயிற்சி நிலையத்தில் 'தலைமைத்துவம் மற்றும் உந்துதல்' குறித்த 21 நாள் இராணுவ நோக்குநிலை பயிற்சியினை பெற்று வரும் பட்டதாரிகளுடன் இன்று காலை (30) கலந்துரையாடினார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ‘சௌபாக்ய தெக்ம' கொள்கைத் திட்டத்தின் கீழ் அரச சேவையில் இணைக்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான இராணுவ நோக்குநிலை-பயிற்சித் திட்டமானது செப்டம்பர் 14 அன்று நாடுபூராகவுமுள்ள 51 இராணுவ பயிற்சி நிலையங்களில் கட்டங்களாக தொடங்கப்பட்டன. குறித்த பயிற்சிகளானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் , பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படைப் பிரிவுத் தலைமையகங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகளில் உள்ளிட்ட பரந்த இராணுவ நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 418 பட்டதாரிகள் அடங்கிய ஒரு குழு இப்போது சாலியாபுர கஜபா படையணி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகிறது.
பயிற்சியாளர்களுடனான அவரது கலந்துரையாடல்களின் போது, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பயிலுனர்களின் நல்வாழ்வு, வசதிகள், பாடத்திட்டத்தின் மதிப்பீடு குறித்து விசாரித்தார், மேலும் திட்டவட்டமான உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவதாக உறுதியளித்தார், அதே நேரத்தில் அதிக விசாலமான தங்குமிடம், நலன்புரி, மருத்துவம் மற்றும் பிற நிர்வாகத் தேவைகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தினார். பயிற்சியின் பின்னர் அவர்கள் வெளியேறியதும் பயிற்சியின் அனுபவங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
21 நாள் கொண்ட பயிற்சியின் முதல் கட்டம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ மையங்களிலும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 2020 ஒக்டோபர் தொடக்கத்தின் சில நாட்களுக்குப் பிறகு இராணுவம் 10,000 க்கும் மேற்பட்ட 2 ஆவது கட்டத்தை பயிற்சியினை வழங்கவுள்ளது.
ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டத்தின் நோக்கம், ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகளை ஐந்து மாதங்களுக்குள் அனைத்து 50,000 பட்டதாரிகளையும் உள்ளடக்குவதாகும். உள்ளீர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்ப்பதற்காக பயிற்சி பணிப்பகத்துடன் இணைந்து 'தலைமைத்துவம் மற்றும் குழு பயிற்சி ' ‘முகாமைத்துவ பயிற்சி 'தனியார் மற்றும் அரச துறை நிறுவனங்களில் பயிற்சி ',' திட்டப்பணி மற்றும் கள ஆய்வுகள் ',' ஒத்திசைவு மற்றும் பின்னடைவு 'போன்றவைகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன. இந்த திட்டமானது பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு மற்றும் ஏழு பாதுகாப்பு படை தலைமையக மட்டத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகின்றது. buy footwear | jordan Release Dates