02nd October 2020 06:50:08 Hours
ஶ்ரீ ஜய மகா போதியில் மத ஆசிர்வாத நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அனுராதபுரத்தில் மாற்றுத்திறனாளி படை வீரர்களுக்காக அமைக்கப்பட்ட அபிமன்சல-1 விடுதிக்கும் தனது விஜயத்தை மேற்கொண்டார். அங்கு 40 மாற்றுத்திறனாளி படை வீரர்கள் சிகிச்சை பெற்று வசித்து வருகின்றனர். குறித்த விஜயமானது எதிர்வரும் இராணுவ தின விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது.
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அங்குள்ள மாற்றுத்திறனாளி படை வீரர்களை சந்தித்து அவர்களின் நலன் மற்றும் தேவைகள் தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். மற்றும் அங்குள்ள படை வீர்ர்களுக்கு இராணுவத் தளபதியினால் அன்பளிப்பு பொதிகள் வழங்கப்பட்டன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நாளின் பிரதம அதிதியவர்கள் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக திறன் வாய்ந்த குறித்த போர் வீர்ர்களுடன் இணைந்து மதிய உணவை உட்கொண்டார்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தனா, இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, பதவி நிலை அதிகாரிகள் ,பாதுகாப்புப் படைகளின் தளபதிகள், புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர, அபிமன்சல-1 கட்டளைத் தளபதி பிரிகேடியர் துசித ஹெட்டியாராச்சி, மற்றும் பல சிரேஷ்ட திகாரிகள் இவ்விஜயத்தின் போது இணைந்திருந்தனர்.
பின்னர் அவர் அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்பத்தினை இட்டார். bridgemedia | Nike Shoes