28th September 2020 15:55:29 Hours
ஓய்வு பெற்று செல்லும் இலங்கை தேசிய பாதுகாப்பு படைத் தளபதியும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ரசிக பெனேண்டோ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி குருநாகல் வேஹரையில் அமைந்துள்ளபடையணி தலைமையக வளாகத்தில் (26) ஆம் திகதி சனிக்கிழமை இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்று செல்லும் இந்த படைத் தளபதிக்கு இலங்கை தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.இதன் போது அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர்களும் கலந்துகொண்டனர்.
படையினர்களுக்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்கள் அனைத்து படையினர்களினால் அவருக்கு வழங்கப்பட்ட உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
அதே நாள் மாலை ஒய்வுபெற்று செல்லும் படைத் தளபதி மற்றும் ஒய்வுபெற்று செல்லும்இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாயா பெர்னாண்டோ அவர்களுக்கு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.அவர் மன்ற உறுப்பினர்கள்,அனைத்து பதவி நிலை அதிகாரிகள் மற்றும் அவரது சேவைக் காலத்தில் அதிகபட்ச ஆதரவை வழங்கிய அனைத்து கட்டளை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஓய்வு பெற்று செல்லும் படைத் தளபதிமேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்கள் 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி படையணியினை விட்டு விடைபெற்றுச் சென்றார். அவர் விடைபெற்றுச் செல்லும் போது அங்குள்ள அனைத்து படையினரும் மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். Sportswear Design | Nike for Men