29th September 2020 11:40:26 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் சனிக்கிழமை (26) மன்னாரில் உள்ள 54 ஆவது பதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள பிரதேசத்திற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு 54 ஆவது படைப் பிரிவினால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நிலைமை மற்றும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் தொடர்பாக அறிந்து கொண்டார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் பிரிகேட் தளபதிகளிடம் இருந்து விளக்கத்தைப் பெற்ற வருகை தந்த வன்னி தளபதி அவர்கள் குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை முடிந்தவரை தடுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.
பின்னர், 541 ஆவது பிரிகேட் படைப்பிரிவு பகுதியில் உள்ள மூந்தம்பிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று உள்ளூர் மீன்பிடி சங்கத்தின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
543 ஆவது பிரிகேட் படையணிப் பொறுப்பில் உள்ள மன்னார் தென் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார், மேலும் கேரள கஞ்சாவைக் கண்டுபிடிப்பதற்கு தலைமைதாங்கிய 7 ஆவது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் சிறந்த செயற்பாட்டினை பாராட்டினார்.
54 ஆவது பதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார மற்றும் 541 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரதீப் குலதுங்க ஆகியோர் இந்த பயணத்தின் போது பாதுகாப்பு படைத் தளபதியுடன் இணைந்து கொண்டனர். bridge media | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta