Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2020 10:28:26 Hours

படையினரால் மன்னாரில் கடத்தப்பட்ட மஞ்சள் கைப்பற்றல்

மன்னார் கொந்தாச்சியில் பிரதேசத்தில் உள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 8 ஆவது பட்டாலியன் விஜயபாகு காலாட்படை படை மற்றும் 3ஆவது கொமாண்டோ படையணியின் படையினர் இணைந்து திங்கள்கிழமை (28) இரவு ஒரு சந்தேக நபரை கைது சைய்து அவரிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட 946 கிலோ மஞ்சளினை கைப்பற்றி 29 ஆம் திகதி அதிகாலை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.குறித்த மஞ்சள் பங்குகளின் பெறுமதி ரூபா 3.7 மில்லியனுக்கும் அதிகமாகும்.

படையினர் அருகிலுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடுவதனை அதானித்து அவரைக் கைது செய்ய சென்றனர், ஆனால் படையினரை பார்த்த குறித் நபர் தப்பி ஓடத் தொடங்கினார். பின்னர் படையினர் அவரைப் பிடித்து, அப்பகுதியில் அவரது நடமாட்டம் குறித்து விசாரணை செய்து மறைத்து வைக்கப்பட்ட மஞ்சள் கையிருப்பைக் கைப்பற்றினர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்ட மஞ்சள் கையிருப்புடன் மன்னார் பொலிஸாசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். buy footwear | AIR MAX PLUS