29th September 2020 11:28:26 Hours
இன்று காலை (29) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 03 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் லெபனானில் இருந்து வருகை தந்து பூனானை தனிமைபடுத்தல் மையத்தில் (02), நிபுன பூஸ்ஸ தனிமைபடுத்தல் மையத்தில் ஒரு வெளிநாட்டு மாலுமியும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.
அபுதாபியில் இருந்து EY 264 விமான மூலம் 24 பயணிகள், தோஹா கட்டாரில் இருந்து QR 688 விமானம் மூலம் 46 பயணிகள் மற்றும் கட்டாரில் இருந்து UL 218 விமானம் மூலம் 27 பயணிகள் இன்று கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.
இன்றைய தினம் (29) தனிமைப்படுத்தப்பட்ட 297 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் பம்பைமடு தனிமைப்படுத்தல் மையம் (154),பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் (03), கொஸ்கொட செரடன் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையம் (108), ஹோட்டல் கிலப்டொல்பின் தனிமைப்படுத்தல் மையம்(30), மற்றும் ருவல கல்பிட்டிய தனிமைப்படுத்தல் மையம்(02) உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
அதேபோல், இன்று 29 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 46330 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். இன்று (29) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 6882 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (28) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1203 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 284059ஆகும்.
இதற்கிடையில், குணமடைந்த 02 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (29) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களாகும்.
இன்று (29) காலை 6.00 மணியளவில், கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சேனாபுர சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில், தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். jordan release date | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5