28th September 2020 15:50:29 Hours
மிஹிந்து செத் மதுர மற்றும் அபிமன்சல 1,2,3 மற்றும் ரணவிரு செவன ஆகிய இடங்களில் வசிக்கும் விசேட தேவையுடைய படை வீரர்கள் ராகம ரணவிரு செவன உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் (செப்டம்பர் 22-23) டேபில் டெனிஸ் போட்டியில் கலந்து கொண்டனர்.
நான்கு நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போட்டியில் சார்ஜன்ஜே.எம்.பி குலரத்ன (ராகம ரணவிரு செவன) மற்றும் அபிமன்சல 1 இல் உள்ள கோப்ரல் ஜி.எம்.ஆர்.எஸ்.பி சமரநாயக்க ஆகியோர் இறுதி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டனர்.
ஆதேபோல், ராகம ரணவிரு செவனவை சேர்ந்த சாதாரண படைவீரர் ஆர்.எம.எஸ் தர்மபால மற்றும் ஸ்டாப் சார்ஜன் என்.என் தினேஸ் ஆகியோர் இரு வெவ்வேறு போட்டிகளில் முதலாவது இடங்களை பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் இறுதி நாளான 23 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சிரான் அபேசேகர அவர்கள் கலந்து கொண்டதோடு, ராகம ரணவிரு செவன நிலைத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் துஷான் சேனாரத்ன, பிரதி கட்டளைத் தளபதி பிரிகேடியர்விபுல சந்திரசிறி, ரணவிரு வள நிலையத்தின் தளபதி பிரிகேடியர் தனிஸ்க பெரேரா, அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike Shoes, Sneakers & Accessories