28th September 2020 10:37:10 Hours
இன்று காலை (28) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்து போகொட தனிமைபடுத்தல் மையத்தில் (01), இந்தியாவில் இருந்து வருகை தந்து பிடிபான மற்றும் வாஸ்கடுவ தனிமைபடுத்தல் மையத்தில் (02), இந்தியாவில் இருந்து வருகை தந்து வஸ்கடுவ தனிமைபடுத்தல் மையத்தில் 06 நபர், பங்களாதேஸில் இருந்து வருகை தந்து கதிர்காமத்தில் உள்ள மந்தர தனிமைபடுத்தல் மையத்தில் (02) தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (28) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.
துபாயில் இருந்து EK 648 விமான மூலம் 50 பயணிகள், ஜப்பானில் இருந்து UL 455 விமானம் மூலம் 38 பயணிகள் இன்று கொழும்பு வந்தடைந்தனர். மேலும் ஓமானில் இருந்து TST 2371 விமான மூலம் 101 பயணிகள் வரவுள்ளனர் என்று எதிர்பார்கப்படுகின்றது. அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.
இன்றைய தினம் (28) தனிமைப்படுத்தப்பட்ட 606 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையம் (08), பிடிபான தனிமைப்படுத்தல் மையம் (07), ஹேகித்த செஸ்ட் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் மையம் (02), டிக்வெல்ல ரிசோட் தனிமைப்படுத்தல் மையம் (06), ஹோட்டல் கிலப் டொல்பின் தனிமைப்படுத்தல் மையம் (40), ஜெட்விங் புளூ (02) கல்கிஸ்ஸை ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையம் (289), பியகம விலேஜ் தனிமைப்படுத்தல் மையம் (05), கந்தகாடு தனிமைப்படுத்தல் மையம் (186) மற்றும் போகொட தனிமைப்படுத்தல் மையம் (61) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
அதேபோல், இன்று 28 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 45636 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். இன்று (28 ) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 77 தனிமைப்படுத்தல் மையங்களில் 7484 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (27) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1410 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 282197 ஆகும்.
இதற்கிடையில், குணமடைந்த 22 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (27) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களாகும்.
இன்று (28) காலை 6.00 மணியளவில், கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சேனாபுர சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில், தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். affiliate tracking url | jordan Release Dates