Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2020 12:18:23 Hours

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய்தொற்று பதிவாகவில்லை – கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (17) நிலவரப்படி ஒருவர் கூட கொவிட்-19 நோய்தொற்று நோய்குற்படவில்லை என கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாடு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (17) 6.00 மணி நிலவரப்படி, கந்தக்காடு மற்றும் சேனாபுர போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 649 ஆகும். இவர்களில் 528 நபர்கள் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள் , 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர், வெலிகடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவர் உள்ளடங்காளாக 48 பேர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடையவர்களாகும்.

280 பயணிகளுடன் ஓமானில் இருந்து யுஎல் 206 விமானமும், 3 பயணிகளுடன் அபுதாபியில் இருந்து விமானம் டிஎஸ்டி விஎச்ஒய்கிபியும் நேற்று இரவு (16) இலங்கைக்கு வந்து சேர்ந்தன. 35 பயணிகளுடன் தோஹா கத்தாரில் இருந்து விமானம் QR 668, சென்னையிலிருந்து 6E 9034 விமானம், மற்றும் 03 நபர்களுடன் அபுதாபியிலிருந்து விமானம் EY 264 ஆகியவை இன்று (17) இலங்கைக்கு வந்து சேரும், மேலும் அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்றைய நாளைக்குள் (17), தனிமைப்படுத்தப்பட்ட 608 நபர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்களில், ஜெட்விங் புளூ தனிமைபடுத்தல் மையத்தில் 14 பேர், பியகம விலேஜ் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 60 பேர், பெகோன் பீச் ஹோட்டலில் 14 பேர், ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் மையத்தில் 11 பேர், சிகிரி கிராம தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவர், புனானி தனிமைபடுத்தல் மையத்தில் 214 பேர், பிராண்டிக்ஸ் புனானி தனிமைபடுத்தல் மையத்தில் 193 பேர், 87 பேர் நொரோச்சோலாய் தனிமைபடுத்தல் மையம் மற்றும் அமயா பீச் தனிமைபடுத்தல் மையத்தில் 14 நபர்கள் அடங்குவர்.

அதன் அடிப்படையில் இன்று (17) காலை வரை 41861 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 6270 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (15), நாடு முழுவதும் 1690 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 259778ஆகும்.

இதற்கிடையில், கொவிட்-19 தொற்றுக்குள்ளான 5 பேர் முற்றாக குணமடைந்த பின்னர் இன்று அதிகாலை (17) வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் . அதன்படி, கண்டகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 நபர்கள் முற்றாக குணமடைந்த பின்னர் வெளியேறியுள்ளனர்.

புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய மொத்தம் 11 தொற்றாளர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தவிர வேறு எந்த விதமான கொரோனா தொற்றுகளும் சமூகத்தில் பதிகாவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளை சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தொடர்ந்து அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (முற்றும்) bridge media | Nike SB