23rd September 2020 12:20:38 Hours
இன்று காலை (23) ஆம் திகதி அறிக்கையின் படி, 14 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் ஒருவரும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 07 பேர், கெமுனு ஹேவா படையணி தனிமைபடுத்தல் மையம், சம்பூர் தனிமைபடுத்தல் மையம் மற்றும் ஹோட்டல் ஜெட்வின் சீ தனிமைபடுத்தல் மையங்களிலும், குவைத்தில் இருந்து வருகை தந்த 3 பேர் ஜெட்வின் புளூ தனிமைபடுத்தல் மையம் மற்றும் இரணைமடு தனிமைபடுத்தல் மையங்களிலும் , இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவர் ஹோட்டல் ஜெட்வின் பீச் தனிமைபடுத்தல் மையத்திலும் கட்டாரில் இருந்து வருகை தந்த 2 பேர் முலங்காவில் தனிமைபடுத்தல் மையத்திலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (23) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.
தோகா கட்டாரில் இருந்து QR 668 விமான மூலம் 42 பயணிகளும், மும்பை இந்தியாவில் இருந்து UL 1042 விமானம் மூலம் ஒரு பயணியும் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையிரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (23) பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு 162 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் நிபுனபூஸ்சஸா தனிமைபடுத்தல் மையத்தில் 11 பேர், பெரிய காடு தனிமைபடுத்தல் மையத்தில் 17 பேர், பெல்வேஹர தனிமைபடுத்தல் மையத்தில் 77 பேர், ஹோட்டல் ஜெட்வின் சீ தனிமைபடுத்தல் மையத்தில் 50 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் மையத்தில் 07 பேர் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
அதேபோல், இன்று 23 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் , 43,895 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 68 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,120 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (22) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1530 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 270,881 ஆகும்.
இதற்கிடையில், குணமடைந்த 18 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (23) அதிகாலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறயுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களாவர்.
இன்று (23) காலை 6.00 மணியளவில், தொற்று நோய்க்கு உள்ளான 04 பேர் தற்பொழுதும் கந்தகாடு போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். தொற்றுக்குள்ளான 646 நபர்கள் குணமடைந்த பின்னர் வைத்தியசாலைளில் இருந்து வெளியேறியுள்ளனர். அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தங்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து அதன் பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Sneakers Store | NIKE AIR HUARACHE