Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2020 12:15:41 Hours

கிழக்கு பாதுகாப்புப் படை தளபதி பட்டதாரி பயிற்சி நடைமுறைகளை பார்வையிடல்

கிழக்கு பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் சயிந்தக்க கமகே வெள்ளிக்கிழமை (18) கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளத்தியற்கு விஜயம் மேற்கொண்டார். அவரை கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளத் தளபதி பிரிகேடியர் அதுல ஆரியரத்ன வரவேற்றார், கிழக்கு பிராந்தியத்தின் வழங்கல் மற்றும் சேவைகள் குறித்து ஆராய்ந்தார்.

தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவற்றின் செயல்பாடுகள், பொறியியல் சேவைப் படை, இலங்கை மின் மற்றும் பொறியியல் படை (SLEME) வாகன பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான விடயங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 3 வது பொறியியல் சேவைப் படை, 4 வது இலங்கை இராணுவ சேவைப் படை, 5 வது இலங்கை இராணுவ வைத்தியப் படை, 3வது இலங்கை இராணுவ உபகரண வழங்கல் படை, 3 வது இலங்கை மின் மற்றும் பொறியியல் படை, 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படை மற்றும் 6 வது (தொண்டர்) இலங்கை இராணுவ பொது சேவை படை ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்றன.

கலந்துரையாடல்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் படைத் தளபதி, மினேரிய படைக்கலச் சிறப்பணி பயிற்சி நிலையம் , மினேரிய காலாட்படை பயிற்சி நிலையம் மற்றும் இராணுவ பொலிஸ் படை பயிற்சி நிலையம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டதாரிகளுக்கான தலைமைத்துவ திறன் மேம்பாட்டு மற்றும் குழுசெயற்பாடு பயிற்சியின் நடைமுறைகளை பார்வையிட்டார். மேலும் இங்கு இப்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பாக பயிற்சி பட்டதாரிகளிடன் கலந்துரையாடினார். அத்தோடு அப் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். Authentic Nike Sneakers | Air Jordan