Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2020 12:05:41 Hours

இலங்கை படைக்கலச் சிறப்பணி அதிகாரிகளின் விவாத திறன் மேம்பாட்டு போட்டி

இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படை அலகுகளிடையிலான விவாதப் போட்டி 2020 ஆகஸ்ட் மாதம் 19 ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை இலங்கை படைக்கலச் சிறப்பணி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இதன் இறுதிப் போட்டி ராக் ஹவுஸ் முகாமில் நடைப்பெற்றது. மேலும் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்தல், தீமைகள் மற்றும் சாதகங்களை மதிப்பீடு செய்தல், , குழு கட்டமைத்தல், அடிப்படை சிந்தனை மேம்பாடு முன்வைத்தல் மற்றும் வாய்மொழி விளக்க திறன் ஆகியவற்றில் அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்காக போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போட்டியின் ஆரம்ப மற்றும் அரையிறுதி சுற்றுகள் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றன. இறுதி சுற்று 2020 செப்டம்பர் மாதம் 16 ம் திகதி இலங்கை படைக்கலச் சிறப்பணியின் ராக் ஹவுஸ் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

3 வது இலங்கை படைக்கலச் சிறப்பணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலாவது இலங்கை படைக்கலச் சிறப்பணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படை அலகுகளிடையிலான விவாதப் போட்டி 2020 இன் சிறந்த விவாதியாக லெப்டினன்ட் கேணல் டி.எம்.வி.எம்.ஆர் திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. இந்திரஜித் ஆபொன்ஸ்சு, பிரிகேடியர் ஹசாட் இசதீன் மற்றும் பிரிகேடியர் பிரதீப் குலதுங்க ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டனர். விழா நிறைவில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals