21st September 2020 11:55:41 Hours
இராணுவ மகளீர் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவ மகளீர் படையின் சார்ஜென்ட் மேஜர்கள் மற்றும் அணிநடை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை 2020 செப்டம்பர் மாதம் 18ம் திகதி முல்லைத்தீவு 59 வது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைப்பெற்றது.
இராணுவ மகளீர் படையின் படைத் தளபதி தொடக்க உரையில் பட்டறையின் நோக்கத்தை தெளிவுப்படுத்தினார்.
ஆரம்ப நிகழ்வில் இராணுவ மகளீர் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜானக ரத்நாயக்க, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் 1 ம் ,7 ம் மற்றும் 3 ம் (தொண்டர் ) மகளீர் படைகளின் கட்டளை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். Nike Sneakers Store | Yeezy Boost 350 Trainers