Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2020 14:20:27 Hours

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட கேணல் முஹம்மது சப்தார் அவர்கள் தனது முதலாவது விஜயமாக இன்று காலை 22 ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு சென்றதோடு,கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

புதிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கிடையில் பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கையில் கொவிட்- 19 தொற்று நோய் கட்டுப்படுத்தல் நுட்பங்கள் தொடர்பாக அவர் இராணுவத் தளபதியிடம் கேட்டறிந்து கொண்டார். கொவிட்-19 தொற்று நோயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் ஏனைய துறையினரின் கடின உழைப்பிற்கு தனது நன்றியினையும் இராணுவ தளபதியிடம் தெரிவித்தார்.

இராணுவத்திற்கு தனது சிறந்த ஒத்துழைப்பை எப்பொழுதும் வழங்க தயாராக இரப்பதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.மேலும் இரு நிறுவனங்களுக்கிடையில் நடந்து வரும் பயிற்சித் திட்டங்கள் நிலைமை குறித்து அவர் கலந்துரையாடினார். நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடையாளமாக, இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. Nike sneakers | jordan Release Dates