Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2020 16:00:01 Hours

கொழும்பு ரஷ்ய மையத்தில் 'வெற்றி மற்றும் அமைதி எனும் சித்திர கண்காட்சியை இராணுவத் தளபதி திறந்து வைப்பு

2 ஆவது உலகப் போரின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ரஷ்ய மையத்தில் 'வெற்றி மற்றும் அமைதி' என்ற தலைப்பில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்த சித்திர கண்காட்சியின் திறப்பு விழாவில் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.

இக் கண்காட்சியினை கொழும்பு ரஷ்ய மையத்தின் ரஷ்ய கலைக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலை கண்காட்சியானது அதன் மாணவர்களின் திறமைகளின் வெளிப்பாடுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் 2020 செப்டெம்பர் மாதம் திங்கள் (21) முதல் 30 ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு மெட்டரி, கொழும்பு ரஷ்ய மையத்தின் பணிப்பாளர் திருமதி அனஸ்ட்தேசியா கோக்லோவ, ரஷ்ய மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு புத்தபிரிய ராமநாயக்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலயத்தின் இராணுவ, விமானம மற்றும் கடற்படை பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் டெனிஸ் ஐ ஷகோட ஆகியோர் திங்கட்கிழமை (21) இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரஷ்ய கலைப் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவினை அலங்கரித்தன. மேலும் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் சேவை வனிதையர் பிரிவுத் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களும் கலந்துக்கொண்டார். Sportswear free shipping | Nike Off-White