21st September 2020 16:05:12 Hours
குட்டிகல இலங்கை இராணுவ பொது சேவைகள் படையின் பயிற்சி பாடசாலையின் படையினர் சனிக்கிழமை (12) இராணுவத் தளபதியின் துரு மிதுரு நவ ரட்டக் திட்டத்திற்கு அமைய உழுது விதைக்கப்பட்ட வயல்களின் நெல் அறுவடையினை பண்டைய மரபுகள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயகைளுக்கு அமைவாக அறுவடை செய்தனர்.
பாடசாலை மாணவர்கள், பதலங்கல பிரதேச செயலகத்தின் பிரதிநிதிகள், மகாவலி அதிகார சபை, விவசாய சேவைகள் திணைக்களம், உள்ளூர் விவசாய சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் படையினர் அறுவடை விழாவில் இணைந்துக்கொண்டனர். நிகழ்வு ஏற்பாடுகளை குட்டிகல இலங்கை இராணுவ பொது சேவைகள் படையின் பயிற்சி பாடசாலையின் அதிகாரி கட்டளைகள் கேப்டன் பி.எஸ்.எஸ்.சி. வீரகோன் மேற்கொண்டிருந்தார்.
பிரதம அதிதியாக முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைகள் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ். தேமுனி அறுவடை விழாவில் மத அனுஷ்டானங்களுக்கு பிறகு அதிகாரிகள் மற்றும் படையினர் அறுவடை செய்யத் தொடங்கினார். அருவி வெட்டுதல், அடுக்கி வைப்பது, சூடு மிதித்தல், அரைத்தல் மற்றும் சமைத்தல் ஆகிய செயற்பாடுகள் படையினரால் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் கிராமத்தில் உள்ள கொவி கெதெர (உழவர் வீடு) மாதிரி ஒன்றும் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்டிருந்தது. Nike Sneakers | Nike