21st September 2020 11:50:41 Hours
இன்று காலை (21) நிலவரப்படி வெளிநாட்டிலிருந்து வந்த நான்கு பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இத்தாலி இருந்து வந்து அனுராதபுர ஹோட்டல் பாம் கார்டன் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர், சவுதி அரேபியாவிலிருந்து வந்து ஹோட்டல் பாசிவிலா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர், மற்றொருவர் ஹோட்டல் ஜெட்விங் சன்ரீச் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மற்றும் ஒருவர் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என்று கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாடு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (21) காலை 6.00 மணியளவில், கந்தக்காடு மற்றும் சேனாபுர போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 649 பேரில் 528 நபர்கள் புனர்வாழ்வாளர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர், 48 பேர் ஊழியர்ளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவர், 288 பயணிகளுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து யுஎல் 605 விமானமும், 420 பயணிகளுடன் துபாயில் இருந்து இகே 648 விமானமும் 6 இ 9034 விமானம் 06 பயணிகளுடன் இந்தியாவின் சென்னையிலிருந்தும் 10 பயணிகளுடன் ஜப்பானில் இருந்து யுஎல் 455 விமானமும் இலங்கைக்கு வந்துள்ளன. குறித்த அனைவரும் முப்படைகளின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 136 பேர் இன்றைய தினத்திற்குள் (21) பி.சி.ஆர் சோதனைகளின் பின்னர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 117 பேரும் ஹோட்டல் ஜெட்விங் ப்ளூ தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 06 பேரும், ஹோட்டல் ஜெட்விங் சீ தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 06 பேரும், பியகம கிராம தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 07 பேரும் அடங்குவர்.
அதன் அடிப்படையில் இன்று (21) காலை வரை 43,684 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 66 முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6182 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (20), நாடு முழுவதும் 1785 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 268,371 ஆகும்.
18 தொற்றாளர்கள் முழு குணமடைந்த பின்னர் இன்று (21) அதிகாலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். அதன்படி கந்தக்காடு போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 நபர்கள் முழுமையாக மீண்டுவிட்டனர்.
புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புபட்ட தொற்றுக்குள்ளானவர்களில் 11பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தவிர சமூகத்தில் இருந்து எந்தவொரு தொற்றாளரும் பதிவாகவில்லை. இருந்தும் அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி சுகாதார நடைமுறைகளைத் பின்பற்றி நோய் தொற்று பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (முற்றும்) jordan Sneakers | Air Jordan